Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்று தொடக்கம்.!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  டி-20 தொடர் இன்று தொடக்கம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Sep 2020 2:46 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா அணி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியே இங்கிலாந்து சென்ற நிலையில் ஒருவார காலம் தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியை மேற்கொண்டது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடனான டி-20 தொடரை கடந்த வாரம் முடித்த நிலையில் இந்த வாரம் ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் பங்கேற்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் டிராவில் முடிந்தால் இந்த தொடரை முழுமையாக வெல்ல வேண்டும் என்ற நோக்கி இங்கிலாந்து அணி உள்ளது. ஆஸ்திரேலியா அணி உலககோப்பையை தொடரில் இங்கிலாந்தில் தொற்ற நிலையில் இந்த தொடரில் வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கி உள்ளது.

இந்நிலையில் முதல் டி-20 போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்படுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் , வார்னர், மேக்ஸ்வெல், பின்ச் போன்ற அதிரடி வீரர்களுடன் களம் இறங்குகிறது. இங்கிலாந்து அணி மோர்கன், பட்லர், பேஸ்ரோ போன்ற அதிரடி வீரர்களுடன் களம் காணுகிறது.

Next Story