Top
undefined
Begin typing your search above and press return to search.

இறுதிகட்டத்தை நெருகும் சிபிஎல் டி-20 தொடர் - தொடர் வெற்றியில் டிரினிடேட் அணி.!

இறுதிகட்டத்தை நெருகும் சிபிஎல் டி-20 தொடர் - தொடர் வெற்றியில் டிரினிடேட் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  6 Sep 2020 1:37 AM GMT

கரீபியன் பிரீமியர் லிக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி மிகசிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் டிரினிடேடில் உள்ள இரண்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 27வது லீக் போட்டி டிரினிடேட் லாரா அகேடமி மைதனத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஜாக்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா ஜாக்ஸ்அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய டிரினிடேட் அணியில் தொடக்க வீரர்கள் வெப்ஸ்டர் மற்றும் சிம்மன்ஸ் இருவரும் களம் இறங்கினர். சிம்மன்ஸ் 8 ரன்னில் பெவுலியன் திரும்ப அடுத்து களம் இறங்கிய செரிபெர்ட் நிலைத்து விளையாடினார். வெப்ஸ்டர் 20 ரன்னில் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். செரிடெர்ட் 33 ரன்னில் அவுட் ஆக அதை தொடர்ந்து கேப்டன் பெல்லார்ட் களம் இறங்கினார். ப்ராவோ மற்றும் பெல்லார்ட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. பெல்லார்ட் 42 பந்தில் அவுட் ஆக அதை தொடர்ந்து டுவைன் ப்ராவோ களம் இறங்கினார். 20 ஒவர்கள் முடிவில் டிரினிடேட் அணி 175-5 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் கிமண் மொலிஸ் மற்றும் மார்க் டெயல் ஆகிய இருவரும் களம் இறங்கினர். மொலிஸ் 12 ரன்னில் வெளியேற மார்க் டெயல் அதிரடியாக விளையாடி 40 ரன்கள் அடித்தார். பின்னர் களம் இறங்கிய ஆன்ட்ரே ப்ளாச்சர்ஸ் 42 ரன்களும் நபி 17 ரன்களும் சேர்த்தனர். நஜிபுல்லா 12 ரன்களும் சாமி 14 ரன்களும் சேர்த்த நிலையில் கடைசி ஒவரில் 23 ரன்கள் வித்தியாசத்தில் டிரினிடேட் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிரன் பெல்லார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story