Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டி-20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா அணி? இங்கிலாந்து அணியின் படலர் இந்த போட்டியிலிருந்து விலகல்.!

மூன்றாவது டி-20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா அணி? இங்கிலாந்து அணியின் படலர் இந்த போட்டியிலிருந்து விலகல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  8 Sep 2020 5:45 AM GMT

இங்கிலாந்திற்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது ஆஸ்திரேலியா அணி. முதல் இரண்டு டி-20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று இரவு மூன்றாவது டி-20 போட்டி இங்கிலாந்தில் சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆறதல் வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனனில் இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் மூன்றாவது டி-20 போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தவர் பட்லர். இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் இரண்டாவது போட்டியின் போது கை வீரலில் எற்பட்ட காயம் காரணமாக விளையாட மாட்டார் என எதிரபார்க்கப்படுகின்றது. எனவே இந்த போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக இருக்கும் என கருத்தப்படுகின்றது.

எனினும் இங்கிலாந்து அணி பந்து வீச்சில் சிறப்பாக உள்ளதால் ஆஸ்திரேலியா அணிக்கு சற்று கடும் போட்டியாக தான் இருக்கும் என கூறப்படுகின்றது.

Next Story