Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டி-20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற அசத்திய ஆஸ்திரேலியா அணி.!

மூன்றாவது டி-20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற அசத்திய ஆஸ்திரேலியா அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  9 Sep 2020 3:00 AM GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில் மூன்றாவது போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பாண்டென் 2 ரன்னில் நடையை கட்டினார். பின்னர் வந்த மாலன் 21 ரன்னிலும் பில்லிங்ஸ் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். நிலைத்து விளையாடிய பேஸ்ரோ 55 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்களில் மோயின் அலி 23 ரன்களும் டென்லி 29 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி 20 ஒவர்கள் முடிவில் 145-6 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வெட் 14 ரன்னில் வெளியேற பின்னர் வந்த ஸ்டோனிஸ் பின்ச் உடன் இணைந்து அதிரடி காட்டினார். ஸ்டோனிஸ் 26 ரன்னில் வெளியேற கேப்டன் பின்ச் 39 ரன்களில் அவுட் ஆகினார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் வந்த மிட்சல் மார்ஸ் மற்றும் ஆகர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

Image Credits : Fox Sports

Next Story