Top
undefined
Begin typing your search above and press return to search.

சீபிஎல் டி-20 தொடரின் இறுதிபோட்டி இன்று பெல்லார்டின் படையும் டேரன் சாமியின் படையும் மோதுகின்றது.!

சீபிஎல் டி-20 தொடரின் இறுதிபோட்டி இன்று  பெல்லார்டின் படையும் டேரன் சாமியின் படையும் மோதுகின்றது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Sep 2020 4:30 AM GMT

சீபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் மிகசிறப்பாக வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டி இன்று ப்ரைன் லாரா பயிற்சி அகேடமியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு சீபிஎல் தொடர் கொரோனா தொற்றிற்கு இடையில் சிறப்பாக நடைபெற்று முடிந்த முதல் டி-20 லீக் தொடராகும். இதே முறையில் தான் ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைகா தல்லாவாஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வழக்கம் போல் இந்த தொடரில் தோல்வி காணதா டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுது. டிரினிடேட் அணியை பொறுத்த வரையில் நட்சத்திர வீரர்கள் குவிந்துள்ளனர். சுனில் நரைன், ப்ராவோ பிரதர்ஸ் , பெல்லார்ட், சிம்மன்ஸ் போன்ற அதிரடி வீரர்களும் முன்ரோ போன்ற வெளிநாட்டு வீரர்களை கொண்ட அணி.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் செயிண்ட் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த அணியில் சமி, முகமது நபி, சேஸ், ப்ளாட்சர் போன்ற வீரர்கள் உள்ளனர்.

இந்த தொடரின் இறுதி போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பெல்லார்ட் தலைமையிலான டிரினிடேட் அணி இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை செயின்ட் லூசியா அணியை வீழ்த்தி உள்ளது என்பது குறிபிடதகுந்தது. எனினும் இறுதி போட்டியில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகின்றனரோ அவரோ வெல்ல முடியும் என்பதால் பெரிய எதிரபார்ப்பு உள்ளது.

Next Story