Top
undefined
Begin typing your search above and press return to search.

பாபர் ஆஷாமை பின்னுக்கு தள்ளி டி-20 பேட்மேன்களில் முதல் இடத்தை பிடித்தார் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்.!

பாபர் ஆஷாமை பின்னுக்கு தள்ளி டி-20 பேட்மேன்களில் முதல் இடத்தை பிடித்தார் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Sep 2020 4:00 AM GMT

இங்கிலாந்து அணி மட்டும் தான் கொரோனா தொற்று இடைவெளியில் இருந்து மீண்டும் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக மூன்று நான்கு மாதங்கள் எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது வெஸ்ட் இண்டிஸ் அணி.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி வைத்தது இங்கிலாந்து அணி. வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் மூன்று டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பின்னர் பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் என அனைத்து தொடரிகளிலும் தொடர் வெற்றி குவித்து வருகின்றது. சர்வதேச தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகின்றது. இந்தியா அணி கொரோனா தொற்றிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத சூழ்நிலையே உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்பொழுது மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி தற்பொழுது ஐசிசி அறிவித்த தரவரிசை பட்டியலில் பேட்மேன்கள் வரிசையில் பாபர் ஆஷாம் நீண்டகாலமாக முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மாலன் முதல் இடத்தை பிடித்தார். பாபர் ஆஷாமை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடம் பிடித்தார். அதே போன்று பந்து வீச்சிலும் அடில் ரஷித் இரண்டு இடங்கள் முன்னேறி 7ம் இடத்தில் உள்ளார். ஆடம் ஜாம்பா இரண்டு இடங்கள் கீழே இறங்கினார். ஆல்- ரவுண்டரில் கிளேன் மேக்ஸ்வெல் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Next Story