Top
undefined
Begin typing your search above and press return to search.

டி-20 போட்டிகளில் புதிதாக மூன்று மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் - ஷேன் வார்னே புதிய யோசனை.!

டி-20 போட்டிகளில் புதிதாக மூன்று மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் - ஷேன் வார்னே புதிய யோசனை.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Oct 2020 11:30 AM GMT

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே தற்பொழுது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மேன்டராக உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக பல சாதனைகளை படைத்தவர் ஷேன் வார்னே. சூழல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியில் முக்கியமான இடத்தை பிடித்தவர். அவர் தற்பொழுது டி-20 போட்டிகளின் தரத்தை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு விளையாடி முதல் சீசனிலேயே சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று கொடுத்தவர். அவர் தற்பொழுது கொடுத்த பேட்டியில் டி-20 போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக உள்ளதாக கூறியுள்ளார். டி-20 போட்டிகள் வெறும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் மட்டுமே நிரைந்துள்ளது. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு இருவருக்குமே சம்மான நிலையை இருக்கும்.

ஆனால் டி-20 போட்டிகளில் எப்போழுதும் சிக்ஸர்கள் மட்டுமே பறந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப ஐசிசி விதமுறைகளும் உள்ளன என கேள்வி ஏழுப்பியுள்ளார். இதற்கு இடையில் டி-20 போட்டிகளை மேம்படுத்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து விச்சாளர்கள் இடையே சமநிலையை உண்டாக்க மூன்று விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரியின் தூரம் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் சாதாரணமாக 60 முதல் 70 மீட்டர் தான் இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் பவுண்டரியின் எல்லைகள் குறைந்தது 85 மீட்டர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேனுக்கும் பவுலருக்கும் சரியான போட்டி நிலவும்.

அதே போல் சிறிய மைதானமாக இருந்துவிட்டால் அந்த மைதானத்தில் புற்கள் அதிகமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு உதவும் அதே நேரத்தில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் வீச வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு ஒரு பந்து வீச்சாளர்களுக்கு 5 ஓவர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஷேன் வார்னே.

Next Story