Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  5 Sep 2020 4:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டி-20 போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் பேஸ்ரோ இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில் பேஸ்ரோ 8 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மாலன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 44 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பாண்டென் 8 ரன்கள், கேப்டன் மோர்கன் 5 ரன்கள், மோயின் அலி 2 மற்றும் டாம் கர்ரன் 6 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மறுமுனையில் டேவிட் மாலன் அரைசதம் வீளாசினார். மாலன் 66 ரன்கள் அடித்து அவுட் ஆகிய நிலையில் இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 162-7 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கிய நிலையில் தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் சேர்த்தது. பின்ச் 46 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்மித் 18 ரன்னில் வெளியேற அடுத்து வந்த மேக்வெல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 36 பந்தில் 39 என்ற எளிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் தடுமாறியது. இங்கிலாந்து அணி கடைசி ஒவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக டேவிட் மாலன் தேர்வுசெய்யப்பட்டார்.

Next Story