Top
undefined
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டி-20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி - டி-20 தொடரை கைப்பற்றி அசத்தல்.!

இரண்டாவது டி-20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி - டி-20 தொடரை கைப்பற்றி அசத்தல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Sep 2020 2:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் இரண்டாவது போட்டி அதே சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆர்ச்சரின் வேகத்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய அலேக்ஸ் கேரி 2 ரன்னிலும் ஸ்மித் 10 ரன்னிலும் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் பின்ச் 40 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய ஸ்டோனிஸ் 35 ரன்கள் அடித்தார். மேக்ஸ்வெல் 26 ரன்களும் அகர் 23 ரன்கள் அடித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 20 ஒவர்கள் முடிவில் 157-7 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேஸ்ரோ 9 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் பட்லருடன் ஜோடி சேர்ந்த மாலன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மாலன் 42 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பண்டென் மற்றும் மோர்கன் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க படலர் 77 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணி 18.5 ஒவர்களில் வெற்றி இழக்கை எட்டியது. ஆட்டநாயகனா பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

Image Credits : BBC

Next Story