Top
undefined
Begin typing your search above and press return to search.

களைகட்டும் சிபிஎல் டி-20 தொடர் ஹோல்டரின் பார்பாடாஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

களைகட்டும் சிபிஎல் டி-20 தொடர் ஹோல்டரின் பார்பாடாஸ்  அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 Aug 2020 3:47 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 14வது லீக் போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான பார்பாடாஸ் ட்ரைடென்ஸ் அணியும் ரோவன் பவல் தலைமையிலான ஜமைகா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைகா தல்லாவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர் களம் இறங்கிய பார்பாடாஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாரலஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் களம் இறங்கினர். சார்லஸ் 3 ரன்னிலும் ஷாய் ஹோப் 8 ரன்னிலும் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய மையர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் ஹோல்டர் 15 ரன்னில் பெவுலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் மையர்ஸ் 85 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பார்பாடாஸ் அணி 148-7 ரன்களை சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஜமைகா அணியில் தொடக்க வீரர் ப்லிப்ஸ் டக்அவுட் ஆக வால்டன் 10 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து ப்ளாக்வுட் சிறப்பாக விளையாடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் சாட்னர் பந்தில் அவரும் வெளியேற பின்னர் வந்த ரோவன் பவல், ஆஷிப் அலி மற்றும் ப்ராத்வெயிட் போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஜமைகா அணி 20 ஓவர்கள் முடிவில் 112-9 ரன்கள் எடுத்தது. பார்பாடாஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மையர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story