Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் ப்ராவோ டி-20 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் ப்ராவோ டி-20 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 Aug 2020 3:00 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான டூவைன் ப்ராவோ டி-20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டிஸில் தற்பொழுது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அந்த சாதனையை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக பல ஆண்டுகள் கேப்டனாக விளையாடியவர் டூவைன் ப்ராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவர் சர்வதேச போட்டிகளை காட்டிலும் டி-20 லீக் தொடர்களில் அதிக அளவில் பங்கேற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று வெஸ்ட் இண்டிஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது டி-20 போட்டிகளில் 500 விக்கெட்களை விழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ப்ராவோ.

ப்ராவோ இதுவரை 459 டி20 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் இதுவரை விளையாடியுள்ள அணிகள் விவரம்; மேற்கிந்திய தீவுகள், சென்னை சூப்பர் கிங்ஸ், சிட்டகாங் கிங்ஸ், கோமிலா விக்டோரியன், டாக்கா டைனமைட்ஸ், டால்பின்ஸ், எசெக்ஸ், குஜராத் லயன்ஸ், கென்ட், லாகூர் கலந்தார்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் நட்சத்திரங்கள், மிடில்செக்ஸ், மும்பை இந்தியன்ஸ், பார்ல் ராக்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ், சர்ரே, சிட்னி சிக்ஸர்கள் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், டிரினிடாட் & டொபாகோ, டிரினிடாட் & டொபாகோ ரெட் ஸ்டீல் மற்றும் விக்டோரியா.

Next Story