Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் 2020-ன் முதல் சதத்தை பதிவு செய்தார் கே.எல்.ராகுல். முதல் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி.!

ஐபிஎல் 2020-ன் முதல் சதத்தை பதிவு செய்தார் கே.எல்.ராகுல். முதல் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  25 Sep 2020 2:45 AM GMT

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தற்பொழுது ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் ஆறாவது லீக் போட்டி துபாய் இன்டர்னேஷ்னர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதின.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களம் கண்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் கண்டது. டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

மயங்க் அகர்வால் 26 ரன்னில் வெளியேற பின்னர் வந்த பூரன், மேக்ஸ்வெல், கருன் நாயர் ஆகியோர் சிறிது நேரம் நிலைத்து நின்று வெளியேறினர். ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கே.எல்.ராகுல் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 132 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் பெரிய இலக்கை கண்டதும் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். நட்சத்திர வீரர்கள் வீராட் கோலி, டிவில்லியர்ஸ், பின்ச் ஆகிய வீரர்கள் விரைவில் அவுட் ஆகி வெளியேற பெங்களுரு அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story