Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் 2020-க்கான டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கு டாடா, ட்ரீம்11 போன்ற ஐந்து நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி.!

ஐபிஎல் 2020-க்கான  டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கு டாடா, ட்ரீம்11 போன்ற ஐந்து நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Aug 2020 4:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன் படி செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்த நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இதற்கு இடையில் ஐபிஎல் தொடரின் டைடில் ஸ்பான்சர்ஷிப் இருந்து விவோ நிறுவனத்தை நீக்கிய நிலையில் புதிய ஸ்பான்சர்ஷிப்க்கான அழைப்பை விடுத்தது பிசிசிஐ. இந்த நிலையில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கான போட்டியில் இறங்கியுள்ளனர். ஸ்பான்சர்ஷிப்க்கான தொகையாக பிசிசிஐ 300 கோடிகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் டாடா, ட்ரீம் 11, பை சூஸ் , அன்ஹக்கேடமி மற்றும் பதாஞ்சலி போன்ற நிறுவனங்கள் போட்டியில் உள்ளனர். ஆகஸ்ட் 18ம் தேதி இந்த ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் யாரு என பிசிசிஐ அறிவிக்கும் என கூறப்படுகின்றது.

Next Story