Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் - 2020 : டைடில் ஸ்பான்சர்ஷிப் தொகை 300 கோடி என பி.சி.சி.ஐ. அறிவிப்பு.!

ஐ.பி.எல் - 2020 : டைடில் ஸ்பான்சர்ஷிப் தொகை 300 கோடி என பி.சி.சி.ஐ. அறிவிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Aug 2020 4:00 AM GMT

ஐபிஎல்-2020 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமிரக்த்தில் தொடங்கி நடைபெற உள்ளது. கொரோனா பெறும் தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்து ஐபிஎல் போட்டிகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு தற்பொழுது ஐக்கிய அரபு அமிரக்த்தில் நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிசிசிஐ-க்கு புதிய சிக்கல் எழுந்தது.

இந்தியா -சினா நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனையில் இந்தியாவில் சினா தயாரிப்புகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. சினா நிருவனங்கள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸ்ஷர்ஸ் வீவ்வொ நிருவனமும் சினா தயாரிப்பு என்பதால் அதன் உரிமை பரிக்கப்பட்ட நிலையில் புதிய ஸ்பான்ஸ்ஷர்ஸ்க்கான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் படி ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31 2020 வரையிலான ஐபிஎல் 2020 டைடில் ஸ்பான்ஸ்ஷர்ஸ்-க்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த காலக்கட்டத்திற்கான தொகையாக பிசிசிஐ 300 கோடியை அறிவித்துள்ளது. இதன் படி ஆகஸ்ட் 14ம் தேதி ஸ்பான்ஸ்ஷரஸ் விண்ணபிக்க கடைசி நாள் என்றும் ஐபிஎல் 2020க்கான டைடில் ஸ்பான்ஸ்ஷர்ஸ் ஆகஸ்ட் 18ம் தேதி அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story