Top
undefined
Begin typing your search above and press return to search.

சி.பி.எல் 2020 - 4 வது லீக் போட்டியில் ரன்மழை பொழிந்த சிம்ரான் ஹெட்மயர்.!

சி.பி.எல் 2020 - 4 வது லீக் போட்டியில் ரன்மழை பொழிந்த சிம்ரான் ஹெட்மயர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  20 Aug 2020 5:00 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 4வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிஸ் கீரின் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் ரயாட் எம்ரீட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் & நிட்ஸ் பேட்ரியட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் லிண் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர். லிண் 16 ரன்களில் அவுட் ஆக லேவிஸ் 30 ரன்கள் அடித்தார். பின்னர் களம் இறங்கிய பிரடெரிக் கெல்லி மற்றும் தினேஷ் ராம்டின் சொற்ப ரன்களில் அவுட் ஆக பென் டங்க் 29 ரன்களும் கேப்டன் ரயாட் எம்ரிட் 17 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் கிட்ஸ் அணி 127-8 ரன்கள் எடுத்தது. கயானா அணியில் கிமோ பால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்த களம் இறங்கிய கயானா அமேசான் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 10 ரன்களும் ஹேம்ராஜ் 19 ரன்கள் அடித்து அவுட் ஆகிய நிலையில் பின்னர் களம் இறங்கிய ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். ஹெட்மயர் 71 ரன்கள் குவிக்க கயானா அமேசான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிமோ பால் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story