Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். - 2021 தொடருக்கான மெகா ஏலம் கைவிடப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் தகவல்.!

ஐ.பி.எல். - 2021 தொடருக்கான மெகா ஏலம் கைவிடப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் தகவல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Aug 2020 2:30 AM GMT

இந்தியன் பிரிமியர் லீக்(ஐபிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் 13வது சீசன் தொடர் ஆகும். ஐபிஎல் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஐக்கிய அரபு அமிரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து அணிகளின் வீரர்களையும் பொது ஏலத்தில் விட்டு மீண்டும் மெகா ஏலத்தின் மூலம் வீரர்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டிற்கான ஏலம் நடைபெற்று வீரர்கள் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் நடைபெற இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்ட படி நடத்த முடியாத காரணத்தால் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டகளுக்கும் நான்கு மாத இடைவேளியே உள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு நடைபெற இருந்த மெகா ஏலம் கைவிடப்படுவதாக ஐபிஎல் நிர்வாக தலைவர் அறிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு வீரர்கள் விளையாடும் அணிகளிலேயே அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் சம்மதம் தேரிவித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மெகா ஏலம் கைவிடப்பட்டது.

Next Story