Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் செல்கிறது.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் செல்கிறது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Aug 2020 6:45 AM GMT

ஐபிஎல் டி -20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் 2020 மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோன பெறும் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது ஐபிஎல் தொடரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது . ஐபிஎல் 13வது சீசன் செப்டம்பர் 19 - நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது .

தற்பொழுது இந்திய அரசின் அனுமதியுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வரும் 15ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 நாள்கள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.

சென்னை பயிற்சியை தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியன் பிளயர்ஸ் தோனி ,ரெய்னா ,ஜடேஜா ,ஹர்பஜன் சிங் , தீபக் சாகர் ஆகியோருடன் துபாய் செல்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி வீரர் பாப் டூப் ப்ளஸிஸ்-க்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது . ப்ளஸிஸ் மற்றும் லுங்கி இங்கிடி செப்டம்பர் 1ம் தேதி அணியில் இணைவார்கள் என கூறப்படுகிறார். வாட்ஸன், மைக் ஹஸி ஆகியோர் ஆகஸ்ட் 22ம் தேதி இணைவார்கள். சிபில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் பிராவோ,சாட்னர், இம்ரான் தாஹிர் , ஐபிஎல் தொடர் பாதியில் இணைவார்கள் .

இங்கிலாந்து வீரர் சாம் கரன் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஹஷால்வுட் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் பின்னர் இணைவார்கள் என கூறப்படுகிறது.

Next Story