Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் முதல் வாரத்தில் 22 முக்கிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்.!

ஐபிஎல் முதல் வாரத்தில் 22 முக்கிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Aug 2020 5:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன் படி செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்த நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டிகள் நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகின்றது. இந்த தொடரின் காரணமாக 22 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் முதல் வார்த்தில் பங்கேற்க மாட்டார்கள்.

இதன் மூலம் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீகவும் பாதிப்படைகின்றது. ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் (ஐத்ராபாத்), ஸ்டிவ் ஸ்மித்( ராஜஸ்தான்), கம்மிங்ஸ்(கொல்கத்தா), ஹஷல்வுட்(சென்னை), மேக்ஸ்வெல்(பஞ்சாப்), ஆரோன் பின்ச்(பெங்களுரு), ஸ்டோனிஸ், அலேஸ் கேரி ( டெல்லி),

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர், டாம் க்ரான்,( ராஜஸ்தான்) , சாம் க்ரான்( சென்னை), ராய், வோக்ஸ்(டெல்லி), பேஸ்ரோ( ஐத்ராபாத்), மோயின் அலி(பெங்களுரு), இயான் மோர்கன் ( கொல்கத்தா).

Next Story