Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்கள் சேஸிங்க் செய்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பதிலடி.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்கள் சேஸிங்க் செய்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பதிலடி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  28 Sep 2020 4:00 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி ஷார்ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்றிருந்தது. ராஜஸ்தான் அணியை பொருத்தவரையில் அணியில் இங்கிலாந்து அணி அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் அணியில் இணைந்துள்ளார். பஞ்சாப் அணியில் பலமாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் உள்ள நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட் இழப்பதற்கு 183 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய மயாங்க் அகர்வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார்

மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் 69 ரன்கள் குவித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்கள் இழந்த நிலையில் 20 முடிவில் 223/2 ரன்களை குவித்தது. இதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி பெரிய இழக்கை என்பதால் தொடக்கத்திலிருந்து அடித்து விளையாடியது. ஆனால் படலர் 5 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் ஸ்மித் மற்றும் சாம்சன் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். ஸ்மித் 50 ரன்களும் சாம்சன் 85 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். இறுதியில் பொருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ராகுல் திவேட்டியா ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர் அடித்து ஆட்டத்தை மாற்றினார். ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story