Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி, 273 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டி 310 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி.!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி, 273 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டி 310 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  24 Aug 2020 5:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 583-8 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராலி 267 ரன்கள் குவித்தார். பட்லர் 152 ரன்கள் அடித்தார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 24-3 என்ற நிலையில் இருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஆஷார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

நட்சத்திர வீரர் பாபர் ஆஷாம் அவுட் ஆகிய நிலையில் அடுத்து களம் இறங்கிய ஷாபிக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பாவட் ஆலம் 21 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய ரிஸ்வான் அரைசதம் வீளாசினார். ரிஸ்வான் 53 ரன்னில் அவுட் ஆக ஆஷார் அலி சதம் வீளாசினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய யாஷிர் ஷா 20 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 273-10 ரன்கள் அடித்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Next Story