Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.!

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 Aug 2020 3:00 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 5வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான பார்பாடாஸ் ட்ரான்டெஸ் அணியும் டெரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய ஜான்சன் சார்லஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் சார்லஸ் 35 ரன்களில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கோரி ஆன்டர்சன் 2 ரன்னிலும் ஷாய் ஹோப் 19 ரன்னிலும் அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். 18.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் களம் இறங்கிய செயின்ட் லூசியா அணி 5 ஓவர்களுக்கு 49 ரன்கள் அடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. கார்னவால் மற்றும் ப்லேக்ஸர் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். பின்னர் வந்த முகமது நபியும் அதிரடி காட்ட 4.1 ஓவரிலேயே 50-3 ரன்களை அடித்து செயின்ட் லூசியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முகமது நபி தேர்வு செய்யப்பட்டார்.

Next Story