Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு 600 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை இந்த போட்டியில் படைப்பாரா ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு 600 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை இந்த போட்டியில் படைப்பாரா ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  25 Aug 2020 2:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரிகளில் விளையாடி வருகின்றது. முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 583-8 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். பட்லர் 152 ரன்கள் வீளாசினார். அதை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ-ஆன் செய்தது.

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை காட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட நிலையில் 56 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாகிஸ்தான் அணி 100-2 என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அபித் அலியின் விக்கெடை வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 599 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் 600 என்ற சாதனையை இந்த போட்டியில் படைப்பார் என எதிர்பாக்கப்படுகின்றது.

Next Story