Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகபந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகபந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  26 Aug 2020 2:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 583-8 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராலி இரட்டைசதம் வீளாசினார். ஜாஸ் பட்லர் 152 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் விளையாடி பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப கேப்டன் ஆஷார் அலி மட்டும் 141 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 310 ரன்கள் பின்னதங்கி இருந்தால் பாலோ-ஆன் ஆனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி நிலைத்து விளையாடியது.

மழையின் காரணமாக நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் பாதிக்க போட்டி டிராவை நோக்கி சென்றது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 599 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் ஒரு விக்கெட் வீழத்துவாரா என எதிரபார்ப்பு இருந்த நிலையில் மழை சற்று வழிவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஷார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஆன்டர்சன்.

Next Story