Top
undefined
Begin typing your search above and press return to search.

செயின்ட் லூசியா அணியின் திறமையான பந்து வீச்சால் 89 ரன்களில் சுருண்டது பார்பாடாஸ் அணி, கடைசி ஓவரில் திரில் வெற்றி.!

செயின்ட் லூசியா அணியின் திறமையான பந்து வீச்சால் 89 ரன்களில் சுருண்டது பார்பாடாஸ் அணி, கடைசி ஓவரில் திரில் வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 Aug 2020 2:00 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் மிகசிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 19வது லீக் போட்டி குயின் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் செயின் லூசியா ஜோக்ஸ் அணியும் பாபர்பாடாஸ் ட்ரைடென்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பார்பாடாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் காரன்வால் மற்றும் ஆன்ரே ப்ளாட்சர்ஸ் இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 6 ரன்னில் பெவுலியன் திரும்ப அதை தொடர்ந்து களம் இறங்கிய பவுண்சர் 18 ரன்களும் சேஸ் 14 ரன்களும் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக செயின்ட் லூசியா அணி 92/10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பார்பாடாஸ் அணியில் ஹய்டன் வாஸ் 3 விக்கெட்களும் ரெய்ப் 2 விக்கெட்களும் ரஷித் கான் 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய பார்பாடாஸ் அணியில் தொடக்க வீரர்கள் சார்லஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் களம் இறங்கினர். ஹோப் 14 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய மையர்ஸ் 2 ரன்னிலும் கேப்டன் ஹோல்டர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க சார்லஸ் 39 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்கள் ஜொழிக்காததால் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது. செயின்ட் அணியின் சிறப்பான பந்து வீச்சால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக க்ளென் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story