Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த பிரபல விக்கெட் கீப்பருக்கு கையில் 9 விரல்கள் தானாம்! யார் அது?

இந்த பிரபல விக்கெட் கீப்பருக்கு கையில் 9 விரல்கள் தானாம்! யார் அது?

Vignesh KBy : Vignesh K

  |  28 April 2020 1:29 PM GMT

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றியவர் பார்த்தீவ் பட்டேல். இவர் 2002-ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் 25 டெஸ்ட் போட்டி, 38 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்கு கேப்டனாக 2016 - 2017 வரை இருந்தார். அந்த ஆண்டு குஜராத் அணி ரஞ்சி கோப்பை வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவர் இவ்வளாவு வருடங்கள் இடது கையில் 9 விரல்களுடன் விளையாடி உள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதனைப் பற்றி அவர் கூறுகையில்: நான் ஆறு வயதாக இருந்த போது தெரியாமல் கதவு இடுக்கில் இடது கை சுண்டு விரல் மாட்டி துண்டானது. இதற்காக நான் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யும் போது சிறிது கஷ்டமாக இருக்கும். கைகளில் கிளவுஸ் நுழையாது. அதனால் இடது கை விரலில் டேப் சுற்றி ஒட்டி விடுவேன்.

எனக்கு 10 விரல் இருந்தால் எப்படி விக்கெட் கீப்பிங் செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் 9 விரல்களுடன் இத்தனை வருடமாக இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Next Story