Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

இங்கிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Aug 2020 4:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியும் தோல்வியை தழுவியதால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது போட்டிக்கான 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ராரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் க்ராவ்லே, சாம் கர்ரான், ஓலி போப். ஓலி ராபின்சன், டாம் சிப்லே, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Next Story