Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி செல்கிறது.!

இங்கிலாந்து vs பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி செல்கிறது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  17 Aug 2020 3:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடைபெற்றது இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் மாசூட் 1 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் ஆஷார் அலி 20 ரன்கள் மட்டும் அடித்து ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 126-5 ரன்களை எடுத்தது. இர்ணடாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தான் அணி 229-9 என்ற நிலைக்கு சென்றது.

மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிப்படைந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்டமும் 10.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் பாதிப்படைந்தது. பாகிஸ்தான் அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இன்னும் முடியாத நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெறுமா என்ள சந்தோகம் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.

Next Story