Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் வெற்றியை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணி.!

இங்கிலாந்து vs  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் வெற்றியை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 Aug 2020 5:15 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் அதே சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சவுதாம்டன் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. மீணடும் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணி:ரோரி பர்ன்ஸ், டோம் சிபிலி, ஜாக் கிராலி, ஜோ ரூட், ஒல்லி போப், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என கூறப்படுகின்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்ற பவாட் ஆலம் இந்த போட்டியிலும் இடம் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடும். பாகிஸ்தான் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான்அணி: ஷான் மஹ்சூத், ஆபிட் அலி, அசார் அலி, பாபர் அசாம், ஆசாத் ஷபிக், ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா

Next Story