Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஐபிஎல் போட்டியில் சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்ற டெல்லி அணி.!

டெல்லி கேப்பிடல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஐபிஎல் போட்டியில் சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்ற டெல்லி அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 Sep 2020 2:30 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமிரகத்தில் மிகபிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டி துபாய் இன்டர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் பின்னர் பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் விளையாடவில்லை. எனினும் நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வேல், காட்ரெல் போன்ற அதிரடி வீரர்கள் விளையாடினர் அதே போல் டெல்லி அணியில் மார்க்ஸ் ஸ்டோனிஸ், சிம்ரன் ஹெட்மயர், ராபாடா, நார்ஜே ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றனர்.

இதை தொடர்ந்து முதலில் விளையாட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. ப்ரிதிவ் ஷா, தவண், ஹெட்மயர் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ஷ்ரெயஸ் ஐயர் மற்றும் பண்ட் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். பின்னர் கடைசி மூன்று ஓவர்களில் மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் அணியை தெறிக்கவிட்டார். 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 157/8 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல். ராகுல் 21 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேற பின்னர் வந்த கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் கடைசி வரை பொருப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மயங்க் அகர்வால் கடைசி ஓவரில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக அடுத்த பந்தும் ஜோடன் அவுட் ஆகி போட்டி ட்ராவில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கையளப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 2 ரன்னில் இரண்டு விக்கெட் இழக்க டெல்லி அணி எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மார்கஸ் ஸ்டோனிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story