Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் முதல் டி-20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது - இங்கிலாந்து அணியின் டாம் பாண்டன் அதிரடி ஆட்டம்.!

இங்கிலாந்து vs பாகிஸ்தான் முதல் டி-20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது - இங்கிலாந்து அணியின் டாம் பாண்டன் அதிரடி ஆட்டம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  29 Aug 2020 4:45 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி ஏற்கனவே வென்றது. இந்நிலையில் மூன்று டி-20 போட்டிகள் தொடரில் முதல் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் டி-20 தொடரை வெல்ல வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுப்பட்ட நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்தில் மழை குறுக்கிடு அதிகம் இருப்பாதால் இந்த போட்டியும் மழை பொழிவுக்கு நடுவில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேஸ்ரோ 2 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் டாம் பாண்டனுடன் இணைந்த டெவிட் மலன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய டாம் பாண்டன் அரைசதம் கடந்த நிலையில் 71 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து அணி வீரர்கள் மலன் 23 ரன்கள், மோர்கன் 14 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி 16.1 ஓவர்கள் விளையாடிய நிலையில் மழை குறுக்கிட நிலையில் தொடர்ந்து மழை பாதிப்பு இருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

Next Story