Top
undefined
Begin typing your search above and press return to search.

கால் பந்து: 1000-வது போட்டியை கடந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

கால் பந்து: 1000-வது போட்டியை கடந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

Vignesh KBy : Vignesh K

  |  24 Feb 2020 11:16 AM GMT

ஸ்பால் அணிக்கு எதிராக விளையாடியதன் மூலம் 1000-வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கால்பந்து விளையாட்டு போட்டியில் மிகவும் சிறந்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற 'செரி ஏ' லீக்கில் ஸ்பால் அணிக்கு எதிராக விளையாடினர். இந்த போட்டியில் யுவான்டஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

39-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். இந்த போட்டி தான் அவருக்கு 1000-வது போட்டியாகும். மேலும் இந்த போட்டியில் அவர் அடித்த கோல் மூலம் செரி ஏ லீக்கில் தொடர்ந்து 11 போட்டிகளில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பிடித்துள்ளார்.

இந்த சீசனில் மட்டும் இதுவரை 21 கோல்கள் அடித்துள்ளார்.

Next Story