Top
undefined
Begin typing your search above and press return to search.

193 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து! அதிரடி ஆட்டத்தால் சேஸிங் செய்து அசத்தியது இங்கிலாந்து அணி.!

193 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து! அதிரடி ஆட்டத்தால் சேஸிங் செய்து அசத்தியது இங்கிலாந்து அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 Aug 2020 12:59 AM GMT

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றுது. முதல் டி-20 போட்டி மழையால் பாதிப்படைந்த நிலையில் இரண்டாவது போட்டி அதே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஷாம் மற்றும் பக்கர் ஜமாம் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் பாபர் ஆஷாம் அரைசதம் வீளாசினார். பக்கர் ஜமாம் 36 ரன்னில் அடில் ரஷித் பந்தில் அவுட் ஆக பாபர் ஆஷாமும் 56 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடரந்து களம் முகமது ஹஷிப் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய ஹஷிப் அரைசதம் விளாசிய நிலையில் 69 ரன்னில் டாம் க்ரான் பந்தில் அவுட் ஆகினார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 193/4 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜானி பேஸ்ரோ மற்றும் டாம் பாண்டென் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்த நிலையில் பாண்டென் 20 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய டெவிட் மாலன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பேஸ்ரோ 44 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் சிக்ஸர் மழை பொழிந்தனர். அதிரடியாக விளையாடி மோர்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். மாலன் கடைசி வரை ஆட்டம் இலக்காமல் 54 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக கேப்டன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story