Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 கிரிக்கெட்டில் இவருக்கு பந்து வீசுவது கஷ்டமானது - வேக பந்துவீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர்.!

டி20 கிரிக்கெட்டில் இவருக்கு பந்து வீசுவது கஷ்டமானது - வேக பந்துவீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர்.!

Vignesh KBy : Vignesh K

  |  11 May 2020 11:07 AM GMT

இந்திய அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான கே.எல் ராகுல்க்கு டி20 போட்டியில் பந்து வீசுவது கஷ்டமானது என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மற்றும் வீராங்கனைகளும் தங்களுடைய வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இஷ் சோதியுடன் உடன் கலந்துரையாடல் நடத்தினார்.


அந்த கலந்துரையாடலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் விளையாடிய அனைத்து டி 20 போட்டிகளில் பந்து பேசுவது கஷ்டமானது என நியூசிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளரிடம் ஆர்சர் கூறியுள்ளார். அவர் பேசியதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

எங்கள் அணியின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் மோதியபோது நான் ராகுலை இரண்டு முறை சந்தித்தேன். அவர் என்னை விட சிறப்பமானவர் என ஆர்சர் சோதியிடம் கூறியுள்ளார். சென்ற ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் கே.எல் ராகுல் 14 போட்டியில் 593 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் சீசன் 13வது ஏலத்தில் கே.எல் ராகுல் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story