Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கவேண்டும் - முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்.!

டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கவேண்டும் - முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்.!

Vignesh KBy : Vignesh K

  |  25 May 2020 11:53 AM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக அணியை வழி நடத்துகிறார்.

இதனால் கேப்டன் பதவியை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக வழிநடத்த வேண்டும். பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கலாம் என பல கருத்துக்கள் வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அதுல் வாசன் அவருடைய விருப்பத்தை கூறியுள்ளார்.


இதனைப் பற்றி அவர் கூறியது: இந்திய அணியின் கேப்டன் பதவிகளைப் பற்றி பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த முடிவால் விராட் கோலியின் பணி சுமை சிறிது குறையும். ஆனால், அதனை அவர் விரும்ப மாட்டார். மூன்று வகையான போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என நினைப்பார்.

மேலும், தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டன் ‌. ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளார். ஆனால், விராட் கோலியின் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை.

இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்பட வேண்டும். டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கலாம். இது கோலியின் சுமையை குறைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story