Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 உலகக்கோப்பையை நடத்துவது பற்றி ஐசிசி நாளை இறுதி முடிவு - போட்டி நடைபெறுமா இல்லை ஒத்திவைக்கப்படுமா?

டி20 உலகக்கோப்பையை நடத்துவது பற்றி ஐசிசி நாளை இறுதி முடிவு - போட்டி நடைபெறுமா இல்லை ஒத்திவைக்கப்படுமா?

Vignesh KBy : Vignesh K

  |  19 July 2020 11:51 AM GMT

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்தப் போட்டி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பலமுறை கலந்துரையாடல் நடத்தியும் இதற்கான இறுதி முடிவு எடுக்கவில்லை.

இந்தப் போட்டியை நடத்த சாத்தியமில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்கு முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐசிசி உறுப்பினர்களின் கூட்டம் நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பை போட்டி பற்றிய முக்கியமாக பேசப்பட உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் போட்டி 2022ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒருவேளை உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐபில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளதால் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த மிகவும் அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் உலக கோப்பையை பற்றி என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.

Next Story