Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 கிரிக்கெட்டில் KL ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் - தீப் தாஸ்குப்தா!

டி20 கிரிக்கெட்டில் KL ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் - தீப் தாஸ்குப்தா!

Vignesh KBy : Vignesh K

  |  5 May 2020 1:08 PM GMT

கொரோனா வைரஸ் காரணத்தினால் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா டி20 கிரிக்கெட்டில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குப் பின் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிலும் எம்.எஸ்.தோனி விளையாடவில்லை. இதனால் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தயார் படுத்தியது. அவருக்கு அதிகமான அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை சரியாக உபயோகப்படுத்தவில்லை.


இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். அவர் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக பணியாற்றியதோடு பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடினர். இதனால் நியூசிலாந்து தொடரிலும் கே.எல்.ராகுல் தான் விக்கெட் கீப்பராக விளையாடினார்.

மேலும், டி20 கிரிக்கெட் அணிக்கு கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக நியமனம் செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். பின்னர் அவர் கீப்பிங் எப்படி செய்ய வேண்டும் என அறிந்தவர் மற்றும் சிறப்பாக பேட்டிங் திறமை உள்ளவர். அவரிடம் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் உள்ளது என்றார்.

Next Story