Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல்2020 தொடருக்காக துபாய்க்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்.!

ஐபிஎல்2020 தொடருக்காக துபாய்க்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  21 Aug 2020 9:05 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களின் அணி வீரர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே சென்னை சேப்பாகத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் அனைவரும் துபாய் புறப்பட்டனர். ஏற்கனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் துபாய் சென்றுள்ள நிலையில் இன்று சென்னை அணி, மும்பை அணி மற்றும் பெங்களுரு அணி புறப்படுகின்றது.

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், அம்பத்தி ராய்டு, கரண் சர்மா, தீபக் சஹார், ப்வுஸ் சாவுலா, மற்றும் தாகுர் ஆகிய வீரர்கள் புறப்பட்டனர்.

Next Story