Top
undefined
Begin typing your search above and press return to search.

2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் - ஐசிசி முடிவு.!

2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் - ஐசிசி முடிவு.!

Vignesh KBy : Vignesh K

  |  8 Aug 2020 11:33 AM GMT

இந்த ஆண்டின் ஏழாவது டி20 உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த போட்டி வேறு வழி இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியை இந்தியா தான் நடத்தயுள்ளது. அந்தத் தொடரை நடத்துவதற்கு எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. ஆனால், 2021 ஆம் ஆண்டு உலககோப்பை போட்டி நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்க இந்தியா கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவிக்கவில்லை.

ஏனென்றால் 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தினால், 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை நடத்த சிரமமாகி விடும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் எனவும், தற்போது தள்ளிவைக்கப்பட்ட டி20 உலக கோப்பை போட்டி 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story