Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல்2021 மற்றும் 2022 வரை சென்னை அணிக்காக தோனி விளையாடுவார் – சென்னை அணியின் CEO அறிவிப்பு.!

ஐபிஎல்2021 மற்றும் 2022 வரை சென்னை அணிக்காக தோனி விளையாடுவார் – சென்னை அணியின் CEO அறிவிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Aug 2020 6:30 AM GMT

ஐபிஎல் 2020 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் கொரோனா பெறும் தொற்று காரணமாக மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழ்நிலை தொடர்ந்ததால் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19- நவம்பர் 10 வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் தொடருக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்த வரையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஐந்து நாட்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்கிறது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் செல்ல உள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியின் இயக்குனர் CEO விஸ்வநாதன் சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து கூறுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி வரும் 2021 மற்றும் 2022 ஆண்டுகள் வரை விளையாடுவார் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story