Top
undefined
Begin typing your search above and press return to search.

2021 - 22 குளிர்கால ஆஷஸ் தொடரில் விளையாடும் வரை ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

2021 - 22 குளிர்கால ஆஷஸ் தொடரில் விளையாடும் வரை ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆன்டர்சன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Aug 2020 10:00 AM GMT

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் தற்பொழுது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார். தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முன்பான மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்தே ஜேம்ஸ் ஆன்டர்சன் விக்கெட்களை வீழ்த்த தடுமாறிய நிலையில் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் தடுமாறினார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் 97 ரன்கள் கொடுத்தார். இதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் இது கூறித்து ஆன்டர்சன் பதில் அளித்துள்ளார்.

ஆன்டர்சன் கூறியதாவது: நிச்சயமாக ஓய்வு பெறும் எண்ணம் தற்பொழுது இல்லை நிச்சயம் இல்லை என கூறினார். நான் விளையாடுவதற்கு பசியாக உள்ளதாக கூறினார். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியை விட சிறப்பாக பந்து வீச வேண்டும் என கூறினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆபிட் அலிக்கு எதிராக ஆன்டர்சன் பந்து வீசிய போது சிலிப்பில் ஸ்டோக்ஸ் கேட்சை தவறவிட்ட போது உணர்ச்சி மற்றும் விரக்தி அடைந்ததாக கூறினார். இது எனக்கு வெறுபூட்டும் வாரம் எனவும் கூறினார். 2021-22 குளிர்கால ஆஷஸ் தொடரில் விளையாடுவேன் எனகூறினார்.

Next Story