Top
undefined
Begin typing your search above and press return to search.

3910 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் இடம்பிடித்த பாகிஸ்தான் அணி வீரர்.!

3910 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் இடம்பிடித்த பாகிஸ்தான் அணி வீரர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Aug 2020 10:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்தார் பார்ட் ஆலம். 2009 ஆண்டு பாகிஸ்தான் அணியில் முதன் முதலில் இடம் பிடித்த ஆலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் 3910 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் சர்வதேச போட்டியில் இடம் பெற்றுள்ளார். 88 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு மீண்டும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன்பு நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள நிலையில் ஒரு சதம் அடித்துள்ளார். இடது கை பேட்மேனாக விளையாடுகிறார். இந்த போட்டியில் இவரின் ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

Next Story