Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 தொடரில் 500 போட்டி மற்றும் 10,000 ரன்களை அடித்து கீரோன் பொல்லார்ட் சாதனை!

டி20 தொடரில் 500 போட்டி மற்றும் 10,000 ரன்களை அடித்து கீரோன் பொல்லார்ட் சாதனை!

Vignesh KBy : Vignesh K

  |  5 March 2020 10:10 AM GMT

மேற்கு இந்தியா தீவு கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது . இந்த போட்டியில் மேற்கு இந்தியா தீவு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் மேற்கு இந்தியா தீவு அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய போட்டி தான் மேற்கு இந்தியா தீவு அணி கேப்டன் கீரோன் பொல்லார்டுக்கு 500-ஆவது போட்டியாகும் . உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் உள்பட அனைத்து வகையான டி20 போட்டியில் 500 ஆட்டத்தில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

முதல் போட்டியில் பொல்லார்ட் 15 பந்களில் 34 ரன்கள் அடித்தார் . இதன் மூலம் டி20 போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் எடுத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரனகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார். முதல் இடத்தில் மேற்கு இந்தியா தீவு அணி கிறிஸ் கெய்ல் 404 ஆட்டத்தில் விளையாடி 13,296 ரன்களை எடுத்து உள்ளார்.

Next Story