Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.ஆர்.சி.ஏ அணிக்காக அஸ்வின் சதம் அடித்தார்!

எம்.ஆர்.சி.ஏ அணிக்காக அஸ்வின் சதம் அடித்தார்!

Vignesh KBy : Vignesh K

  |  10 March 2020 7:41 AM GMT

இந்தியா அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின். சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட்கள் எடுத்தார். பேட்டிங் நன்றாக விளையாட வில்லை என்பதால் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்படவில்லை.

தற்போது தமிழக கிரிக்கெட் சார்பில் நடைபெற்று வரும் முதல் தர லீக் தொடரில் மைலாப்பூர் (எம்.ஆர்.சி.ஏ.,) அணிக்காக ரவிச்சந்திர அஸ்வின் விளையாடுகிறார். இவர் ஆல்வார்பேட்டை அணிக்கு எதிரான ஆட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கி அஸ்வின் 102 ரன்கள் விளாசினார் . அஸ்வினும் சக வீரர் சீனிவாசனுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார். முதல் நாள் ஆட்டத்தில் எம்.ஆர்.சி.ஏ., அணி 346/10 ரன்கள் அடித்தது.

மேலும் ஆல்வார்பேட்டை அணி 350/4 ரன்கள் அடித்தது . அஷ்வின் 2 விக்கெட் எடுத்தார். போட்டி டிராவில் முடிந்தது.

Next Story