Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை!

Vignesh KBy : Vignesh K

  |  25 Feb 2020 1:05 PM GMT

பெண்களுக்கான 19 வயது உள்ளிட்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் களம் இறங்கிய அருணாச்சல பிரதேசம் அணி 187 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்தது. சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் அணி 25 ரன்னில் ஆல்-அவுட் ஆனது .

இதில் சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் ஓவரில் காஷ்வீ இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை விழித்தினர். அதன் பிறகு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.


இதனால் அருணாச்சல பிரதேசம் அணி 10 ரன்களில் ஏழு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்களில் சுருண்டது.மேலும் காஷ்வீ கவுதம் 8 வீராங்கனைகள் டக்-அவுட் ஆக்கினார். அதில் நான்கு பேரை முதல் பந்திலேயே வீழ்த்தி வெளியேற்றினர்.

Next Story