Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி!

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி!

Vignesh KBy : Vignesh K

  |  22 Feb 2020 9:30 AM GMT

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 10 அணிகள் விளையாடும்.

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை வீரர் லூசியன் கோயன் கோல் அடித்ததால் மும்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி. இதற்கு முன்பு கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போது கடைசியாக சென்னையின் எப்.சி., நுழைந்தது.

இந்த தருணத்தில் நேற்று இரவு மும்பையில் நடைபெற்ற 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியில் கடைசி நேரத்தில் சென்னை அணியின் லுசியன் கோயன் சிறப்பாக ஒரு கோல் அடித்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

1-0 என்ற கணக்கில் சென்னை அணி வென்றது . இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரை இறுதியில் முன்னேறியது.

Next Story