Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

Vignesh KBy : Vignesh K

  |  13 March 2020 12:14 PM GMT

தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த தருணத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன்னுக்கு திடீர் என தொண்டை வலி ஏற்பட்டது. மேலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கேன் ரிச்சர்ட்சனை தனிமையில் வைத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. பரிசோதனையின் முடிவில் தான் அவருடைய உடல்நலம் பாதிப்பு பற்றி தெரிய வரும்.

இதை பற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், கேன் ரிச்சர்ட்சன்னுக்கு எங்களுடைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா அரசு கூறிய வழிமுறைகளின் படி அவரை அணியில் உள்ள மற்ற வீரர்களிடம் இருந்து தனிமை படுத்தி வைத்து இருக்கிறோம்" என்று கூறியுள்ளது.

Next Story