Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் 2020: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனாக - டேவிட் வார்னரை!

ஐ.பி.எல் 2020: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனாக - டேவிட் வார்னரை!

Vignesh KBy : Vignesh K

  |  27 Feb 2020 11:44 AM GMT

இந்த வருடத்தின் ஐ.பி.எல் போட்டி மார்ச் மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.

தற்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவர் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2016ஆம் ஆண்டில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்த போது சாம்பியன் பட்டம் வென்றது.

தென்ஆப்பிரிக்கா போட்டியின் போது வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைபெற்றார். இதனால் ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டில் விளையாடவில்லை.

2019ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் கேப்டனாகவும், கேன் வில்லியம்சன் துணைக் கேப்டனாக இருந்தனர்.

இந்த தருணத்தில் தற்போது இந்த ஆண்டு டேவிட் வார்னர்தான் கேப்டனாக இருப்பார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது.

இதை பற்றி டேவிட் வார்னர் பேசுகையில்: ''மீண்டும் அணியை வழிநடத்தும் வாய்ப்பை கொடுத்ததுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்று தெரிவித்தார்.

Next Story