Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 உலக கோப்பைக்கு டோனி அணிக்கு தேவைப்பட்டால் தேர்ந்து எடுக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்.!

டி20 உலக கோப்பைக்கு டோனி அணிக்கு தேவைப்பட்டால் தேர்ந்து எடுக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்.!

Vignesh KBy : Vignesh K

  |  18 April 2020 11:40 AM GMT

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் எம்எஸ் டோனி விளையாடவில்லை. அவர் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் மறுபடியும் அணிக்கு வர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் டோனிக்கு அணிக்கு திரும்ப சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே டோனி இந்திய அணிக்கு வேண்டும் என்று விரும்பினால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும் என சுழல் பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருந்தார்.

இதனைப் பற்றி ஹர்பஜன் சிங் கூறுகையில்: அவரை எப்படி நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? அவருடைய பேட்டிங் திறமையை பார்த்த? அவர் இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவர் மற்றும் கேப்டன் என்பதை பார்த்த தேர்வு செய்விர்களா? அவர் அணிக்கு வேண்டும் என நீங்கள் விரும்பினால் அவர் ஆயத்தமான இருந்தால், தேர்ந்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story