Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தோல்வி - இந்தியா அணி!

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தோல்வி - இந்தியா அணி!

Vignesh KBy : Vignesh K

  |  24 Feb 2020 10:37 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது. இதில் இந்தியா 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது. ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது.

தற்போது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியது. இதுவே இந்தியா அணிக்கு முதல் தோல்வியாகும்.

மேலும் இந்தியா அணி கடைசியாக 2018-2019 ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தின் போது பெர்த் டெஸ்டில் 146 ரன்னில் தோற்றது. தற்போது 13 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியை சந்தித்துள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகியுள்ளது.

இதில் இந்தியா அணி மேற்கு இந்தியா தீவு (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) வித்தியாசத்தில் தொடர்களை கைப்பற்றியது. 7 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

தனது 8-வது டெஸ்டில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. இதனால் இந்தியா 7 வெற்றி, 1 தோல்வியுடன் 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2 வெற்றி, 4 தோல்வியுடன் 120 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

Next Story