Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டம் 55 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார் - ஹர்திக் பாண்டியா!

மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டம் 55 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார் - ஹர்திக் பாண்டியா!

Vignesh KBy : Vignesh K

  |  6 March 2020 10:54 AM GMT

மும்பையில் நடந்து வரும் உள்ளூர் டி20 போட்டியில் மீண்டும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா.

இந்தியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவருக்கு முதுகுயில் ஏற்பட்டகாயத்தால் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.

மீண்டும் பயிற்சியை தொடங்கிய ஹர்திக் பாண்டிய சோதனையில் சிறப்பாக விளையாட வில்லை என்பதால் நியூசிலாந்து தொடர்களில் இடம்பெறவில்லை.

இந்த தருணத்தில் மும்பையில் நடந்து வரும் டாக்டர் டி. ஒய்.பாட்டில் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். அந்த தொடரில் அதிரடியக விளையாடி வருகிறார். இவர் ரிலையன்ஸ் 1 அணிகாக விளையாடி வருகிறார்.

தற்போது பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 பந்துகளில் 158 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 39 பந்துகளில் சதத்தை அடித்துள்ளார். இதில் 20 சிக்ஸர் 6 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு 39 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story